முல்லைப் பெரியாறு பிரச்சனை: தேயிலை, ஏலக்காய் விற்பனை கடும் வீழ்ச்சி
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தமிழகம், கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உற்பத்தியாகும் தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம், கேரளா மாநிலங்கள் இடையே நிலவி வரும் பதற்றம் இன்னும் தணியவில்லை. தமிழகத்தில் இருந்து கூடலூர், குமுளி வழியாக போக்குவரத்து இன்னும் சீரகவில்லை. இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் செங்கோட்டை வழியாக சென்று வருகின்றன.
கேரளாவில் தேக்கடி, குமுளி, மூணாறு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தேயிலை, ஏலக்காய், மிளகு, ஜீரகம், கிராம்பு உள்பட நறுமண பொருட்கள் அதிகளவில் விளைகின்றன. குமுளியில் நறுமணப் பொருள் விற்பனைக்காக பெரிய சந்தையும் உள்ளது.
இங்கிருந்து நறுமண பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சில்லறை விற்பனைக்காக குமுளி, வண்டிபெரியார், பாம்பனாறு உள்பட சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் இடங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன.
நவம்பர் முதல் ஜனவரி வரை இங்கு நிலவும் சீசன் நேரத்தில் தான் ஏராளமான வெளிநாட்டினர் இங்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
தவிர ஐயப்பன் பக்தர்கள் சீசன் என்பதால் பக்தர்களை நம்பி ஏராளமான தற்காலிக கடைகளும் முளைப்பது வழக்கம். இந்த கடைகளில் தினமும் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை வியாபாரம் நடைபெறுகிறது.
ஆனால் தற்போது குமுளி வழியாக சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் உள்பட யாரும் வராததால் இந்த பகுதிகளில் தேயிலை, நறுமணப் பொருட்களின் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தினமும் ரூ.40,000 வரை விற்பனை நடைபெறும் கடைகளில் ரூ.10,000க்கும் குறைவாகவே விற்பனை நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications