தமிழர்கள் மீது தொடர் தாக்குதல்-கேரளாவுக்கான வர்த்தகத்தை நிறுத்தும் நெல்லை, தூத்துக்குடி வியாபாரிகள்
கோவை: தமிழர்கள் மீதும், தமிழகத்திலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீதும் கேரளாவில் மலையாளிகள் தொடர்ந்து வெறித்தனமாக தாக்கி வருவதால் ஆவேசமடைந்துள்ள தூத்துக்குடி, நெல்லை மாவட்ட வர்த்தர்கள், கேரளாவுடனான தங்களது வர்த்தக தொடர்புகளை நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையை கிட்டத்தட்ட இனப் பிரச்சினை போல மாற்றி விட்டனர் மலையாளிகள். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் சென்றாலும் தாக்குகின்றனர். அப்பாவி ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் விடவில்லை. செருப்பு மாலை போட்டும், அசிங்கமாக பேசியும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும், உங்களுக்குத்தான் முருகன் இருக்கானே அங்கு போக வேண்டியதுதானே என்று கேவலமாக பேசியும் அவமானப்படுத்தி தாக்கி வருகின்றனர்.
இந்தத் தொடர் தாக்குதல்களால் கோபமடைந்துள்ள பல்வேறு தரப்பினரும் தமிழகத்தில் பதில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி வர்த்தகர்கள், கேரளாவுடனான தங்களது வர்த்தக தொடர்புகளை நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
தமிழகத்திலிருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள், வேன்கள் என எது சென்றாலும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை நிலவுவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
நிலைமை சரியாகும் வரை அனைத்து வர்த்தக ஏற்றுமதியையும் நிறுத்தி வைப்பது என்றும், நிலைமை சரியான பின்னர் அதுகுறித்துப் பரிசீலிப்பது என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர்.
இதனால் இதுவரை தேனி மாவட்டம் வழியாக மட்டுமே தடைபட்டுள்ள கேரளாவுக்கான பொருள் ஏற்றுமதி, இனி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications