அனுமதி பெறாமல் போராட்டம்– கூடங்குளம் போராட்டக்குழு மீது 115 வழக்குகள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவினர் மீது இதுவரை 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெறுவதால் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரையில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. உரிய அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடப்பதால் உடனுக்குடன் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். வழக்குகள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி அணு மின் நிலைய எதிர்ப்பு குழு மீது கூடங்குளத்தில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+