திருச்சியில் ஐயப்ப பக்தர்களின் வேன் மீது லாரி மோதல்: வேன் ஓட்டுநர் உட்பட 17 பேர் காயம்
திருச்சி: சென்னையில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்ற ஐயப்ப பக்தர்களின் வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநர் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த 20 ஐயப்ப பக்தர்கள் மஹிந்திரா வேன் ஒன்றில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெஞ்சாலையில் உள்ள சிறுகனூர் அருகே வேனை சாலையோரத்தில் நிறுத்தினர்.
வேனில் இருந்த சிலர் இயற்கை உபாதைக்காக இறங்கிச் சென்றனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து மதுரையை நோக்கி வந்த லாரி சாலையோரம் நின்றிருந்த வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் வேன் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஓட்டுநரான முதலிவாக்கத்தைச் சேர்ந்த ஷியாம்(24), ஐயப்ப பக்தர்களான போரூரைச் சேர்ந்த பிரேம்குமார்(32), மதுராந்தகத்தைச் சேர்ந்த பாபு(36), சகாதேவன்(17), கார்த்தி(21) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(18), தட்சிணாமூர்த்தி(31), பாலுச்சாமி(29), பிரேம்குமார்(18) உட்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியினரின் உதவியுடன் காயமடைந்த 17 பேரையும் மீட்டு, திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ஆந்திர மாநில குண்டூரைச் சேர்ந்த நரசிம்மராஜுவை(38) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications