திருச்சியில் பட்டப் பகலில் ரவடி வெட்டிக்கொலை - 6 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
திருச்சி: திருச்சியில் அதிமுக பேரூராட்சி துணைத் தலைவரின் கணவரும் ரவடிமாக இருந்த முருகேசன், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தேர் வீதியை சேர்ந்தவர் முருகேசன்(45). இவரது மனைவி ஆனந்தி. புள்ளம்பாடி பேரூராட்சி அதிமுக துணைத் தலைவராக உள்ளார். அப்பகுதியில் ரவுடியாக சுற்றி திரிந்த முருகேசன் மீது பல கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.
சமீபகாலமாக ரவுடித்தனத்தை விட்ட முருகேசன் திருந்தி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி்க்கு முருகேசன் தனது 2 மகன்களை புள்ளம்பாடியில் உள்ள ஒரு கிறிஸ்தவ நடுநிலை பள்ளியில் விட்டு விட்டு மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
திருச்சி சாலையில் உள்ள சகாய மாதா மருத்துவமனை அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் முருகேசனை பின் தொடர்ந்து வந்தனர். அப்போது அரியலூரை நோக்கி வந்த ஒரு கார், முருகேசனின் மோட்டர் சைக்கிளை தடுத்து நிறுத்தப்பட்டது.
அதில் அதிர்ச்சியடைந்து நின்ற முருகேசனை, பைக்கில் வந்த 2 நபர்களும், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி காரில் இருந்து இறங்கிய 4 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் முருகேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.லலிதா லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றார். மர்ம நபர்களால் அடையாள தெரியாத அளவுக்கு முகம், உடல் பகுதிகளில் தாக்கப்பட்டு இறந்த முருகேசனின் உடலை கைப்பற்றினர். பின்னர் முருகேசனின் உடலை லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கொலைக்கான காரணம் என்ன?
கொலை செய்யப்பட்ட ரவுடி முருகேசனுக்கும், திருச்சியில் உள்ள பல ரவுடி கும்பலுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக பலர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த வரிசையில் முருகேசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். மேலும் முருகேசனின் மனைவி பேரூராட்சி துணைத் தலைவர் என்பதால் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications