வங்க கடலில் குறைந்தழுந்த தாழ்வுநிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவ மழையின் அளவை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை ஏறக்குறைய 43 செ.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பெய்து உள்ள மழை அளவு 50 செ.மீட்டரை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு துவங்கியதால், இனி மழை இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வளிமண்டல மேல் அடுக்கு காற்று சாதமாக உள்ளதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், மாநிலத்தின் வட பகுதிகளிலும் இன்று மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைப் பெய்யாது என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications