நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ட் நகரை அதிர வைத்த கடும் நிலநடுக்கங்கள்
வெலிங்டன்: நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ட் நகரில் அடுத்தடுத்து இரண்டு முறை கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நாட்டின் தென் தீவுப் பகுதியில் உள்ள இந்த நகரில் 5.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கங்களின் தாக்கம் இருந்தது. இதனால் கட்டடங்கள் மிக பலமாக அதிர்ந்தன. சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பலர் காயமடைந்ததுள்ளனர். 19 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 1.58 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 80 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அதே அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கடியில் 4.7 கி.மீ ஆழத்தில் ஒரே இடத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த நகரைத் தாக்கிய பயங்கர பூகம்பத்தில் 182 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications