கேரளாவில் விஷம்போல் ஏறிய காய்கறி விலை: தக்காளி கிலோ ரூ.200, வெண்டை ரூ.130
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக எல்லைகளில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் கேரளாவில் காய்கறி, பழங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும் விற்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரள அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வழியாக கேரளாவுக்கு செல்லும் 13 வழிகளையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராடி வருவதால் பல பாதைகளில் கேரளாவுக்கு அத்தியவாசியப் பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கேரளாவில் அத்திவாசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதே போல் பால், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கொல்லத்தில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.80க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும், முட்டைகோஸ் ரூ.60க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications