For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்: டி.கே.ரங்கராஜன்: டி.கே.ரங்கராஜன்

Google Oneindia Tamil News

தேனி: முல்லைப் பெரியாறு பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து தேனி நகரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,

இந்தியாவில் பிரம்மபுத்திரா-பராக்கா, வசுந்தரா நதி, ராவி, பியாஸ், மகாநதி, கிருஷ்ணா நதி, காவேரி என பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாய்ந்து கொண்டிருக்கும் நதி நீர்ப் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு முன்வரவில்லை.

இந்திராகாந்தி காலம் துவங்கி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன்சிங் காலம் வரை இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டுள்ளது.

தமிழக-கேரள மக்களை மோதவிடுவதை தொழிலாளிகள், விவசாயிகள் வர்க்கக் கட்சி என்ற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பெறுவதில் உறுதியாக நிற்கிறோம். எனவே, முல்லைப் பெரியாறு பிரச்சனையை பேச்சு வார்த்தையின் மூலமே தீர்க்க முடியும் என்றார்.

English summary
CPM MP TK Rangarajan believes Mullai Periyar issue can be solved only through talks. He has accused centre of failing to solve river issues in various states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X