'தானே' புயலாக மாறியது காற்றழுத்தம்- வட மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

மேலும் நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2வது கட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக வட தமிழகத்திலும், புதுவையிலும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அது மெதுவாக வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. அப்புயலுக்கு தானே என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் தற்போது சென்னையிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் நகர்ந்து வட மேற்கில் நகர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு வட கிழக்கில் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்தமானுக்கு 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது மேலும் நகர்ந்து மேற்கு வட மேற்கில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில், கடலூர் மற்றும் நெல்லூர் இடையே 30ம் தேதி அதிகாலையில் கடக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகள், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக இன்று மணிக்கு 75 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். 28ம் தேதி மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், 29ம் தேதி 90 முதல் 110 கி.மீ வேகத்திலும், 30ம் தேதி 65 முதல் 85 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முதல் புயல்
நடப்பு வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் உருவாகியுள்ள புயல் இந்த தானே என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications