தாசில்தார் தற்கொலை: சிபிசிஐடி விசாரணை கோரி வருவாய் துறையினர் அமைச்சரை சந்திக்கிறார்கள்
நெல்லை: அம்பை தாசில்தார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வருவாய் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தற்கொலைக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி புதன்கிழமையன்று அமைச்சர், செயலரை சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாசில்தார் தியாகராஜன் கடந்த 23ம் தேதி நள்ளிரவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் டர்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளான தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது தற்கொலை சம்பவம் வருவாய் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் திங்கட்கிழமையன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் மாநில நிர்வாகிகளுடன் இணைந்து 29ம் தேதி தமிழக வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலர் ஆகியோரையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அதற்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications