கிருஸ்துமஸ் விடுமுறை: சுற்றுலா பயணிகளால் திணறிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கிருஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியதிலிருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.
பயணிகள் கூட்டம்
கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வாயில் என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் காலை உணவு சாப்பிடுவதற்காக சுற்றுலா பயணிகள் காத்து கிடந்தனர். பல இடங்களில் வாகன நெருக்கடியும் காணப்பட்டது.
சூரிய உதயம் காண ஆர்வம்
சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் செவ்வாய்கிழமையன்று காலை சூரிய உதயம் பார்ப்பதற்காக திரிவேணி சங்கமத்தில் திரண்டிருந்தனர். ஆனால் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தங்கும் விடுதியில் இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டு வந்திருந்த லாக்கேஜ்களுடன் சாலை ஓரத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இன்னும் சுமார் 10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications