சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன் உட்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி: காதலியுடன் பேசியதை பார்த்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த +1 மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த எஸ்.பேலாளம் கிராமத்தை சேர்ந்த புட்டமாதப்பா என்பவரது மகன் பிரசாத்(9). கரடிக்கல் அரசு துவக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24ம் தேதி நண்பர்களோடு விளையாட சென்ற பிரசாத் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை.
பிரசாத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்றுமுன்தினம் பிரசாத்தின் பாட்டி சொர்ணாக்காவின் வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பிரசாத்தின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பிரசாத்தின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் பிரசாத்தை கொலை செய்ததாக, கெம்பேகவுண்டன் தொட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரப்பா மகன் மாதேஷ்(16) மற்றும் அவரது நண்பரான பசுவராஜ்(26) உள்ளிட்ட 2 பேரும் கிராம நிர்வாக அலுவலர் சுகுமாரிடம் சரண் அடைந்தனர். இதில் மாதேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +1 படித்து வருகின்றார்.
இது குறித்து மாதேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
+1 படித்த வரும் நானும், 14 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். அடிக்கடி நாங்கள் தனியே சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தோட்டம் ஒன்றில் 2 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக வந்த பிரசாத் எங்களை பார்த்துவிட்டான்.
அதன்பிறகு பிரசாத்தை அழைத்து இது குறித்து வெளியே செல்லாமல் இருக்க பணம் கொடுத்தும், மிரட்டியும் பார்த்தேன். ஆனால் அவன் கேட்பதாக இல்லை. இதனால் பயந்த நான், எனது நண்பன் பசவாராஜிடம் ஆலோசித்தேன். முடிவாக பிரசாத்தை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.
கடந்த 24ம் தேதி மாலையில் வீட்டில் டிவி பார்த்த கொண்டிருந்த பிரசாத்திடம் நைசாக பேசி தோட்டத்திற்கு அழைத்து சென்றோம். தோட்டத்தில் பிரசாத்தை கீழே தள்ளிவிட்டு அவன் மீது நான் அமர்ந்து கழுத்தை நெரித்தேன். அப்போது எனது பிடிப்பில் இருந்து தப்ப முயன்ற பிரசாத்தின் கால்களை பசவாராஜ் பிடித்து கொண்டார்.
முடிவாக இறந்த பிரசாத்தின் உடலை அவனது பாட்டியின் வீட்டு மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கியது போல தொங்கவிட்டோம். பின்னர் மனசாட்சி பொறுக்க முடியாமல், கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தோம், என்றார்.
2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பசவராஜை சேலம் மத்திய சிறையிலும், மாதேஷை சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications