தளவாய் சுந்தரம் நீக்கம்-விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் நீக்கம்

சசிகலாவின் நீக்கத்தையடுத்து அதிமுக கட்சி நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றி வருகிறார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்.தளவாய் சுந்தரம் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் திடீர் நீக்கம்:
அதே போல விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் சிலரையும் நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக விவசாயப் பிரிவு செயலாளர் கே.கே.சிவசாமி, விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கே.பால்சாமி, வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் எஸ்.முத்தையா உள்ளிட்டோர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் ஜி.ராமசாமி, செயலாளர் ஆர்.சேதுபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் கே.முனியசாமி, திருச்சுழி ஒன்றிய செயலாளர் பி.போத்திராஜ், திருத்தங்கல் நகர அவைத் தலைவர் எஸ்.மைக்கேல்ராஜ், செயலாளர் வி.சரவணக்குமார், பொருளாளர் சி.ராமர் உள்ளிட்டோர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
மேலும் ராஜபாளையம் நகர செயலாளர் ஏ.பி.முத்துகிருஷ்ண ராஜா, ராஜபாளையம் தொகுதி செயலாளர் எம்.ஜெயராமன், விருதுநகர் தொகுதி செயலாளர் எஸ்.வி.பி.ரவி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் நக்கமங்கலம் கிளை செயலாளர் கே.காளிமுத்து, நரிக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே.சி.பிரபாத், விவசாய பிரிவு செயலாளர் கே.சுந்தரராஜன் உள்ளிட்டோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இரு்நது விடுவிக்கப்படுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி கழக செயலாளர் ஜி.சந்திரசேகரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார், என்று அந்த அறிக்கையி்ல் தெரிவித்து உள்ளார்.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications