ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா தாக்கல்- சூடான விவாதம்- நிறைவேறுமா?

கடந்த 40 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த லோக்பால் மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் 11 மணி நேர நீண்ட விவாதம், கடும் அமளி துமளி, வெளிநடப்புகளுக்கு மத்தியில் இரவு 11 மணியளவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல்சாசன திருத்த மசோதா தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்யசபா கூடியதும் அங்கு அமைச்சர் நாராயணசாமி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை தாக்கல் செய்து அறிமுகப்படுத்திப் பேசினார்.
மசோதாவை நாராயணசாமி அறிமுகப்படுத்திப் பேசியபோது சபையில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லை. பிரதமர் எங்கே என்று கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. பிரதமர் வந்து கொண்டிருக்கிறார் என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இதையடுத்து அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் அவை கூடியபோது பிரதமர் அவைக்கு வந்தார். இதையடுத்து விவாதம் தொடங்கியது.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி விவாதத்தைத் தொடங்கி பேசினார். ஜேட்லி பேசுகையில், வலுவான லோக்பால் மசோதா அமைவதை ராஜ்யசபா உறுதி செய்ய வேண்டும். திருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதாவை ராஜ்யசபா இன்று நிறைவேற்ற வேண்டும். அதேசமயம், பலவீனமான, அரைகுறைமனதுடன் உருவாக்கப்பட்ட லோக்பால்மசோதாவை நாம் நிராகரிக்க வேண்டும் என்றார்.
8 மணி நேரம் லோக்பால் மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.
ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை நிலவரம்
மொத்தம் 243. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பலம் 95 ஆகும். காங்கிரஸுக்கு 71, திமுகவுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர். திரினமூல் 6, தேசிய மாநாடு 2, சிக்கிம் ஜனநாயகக் கட்சி, ராஷ்டிரிய லோக்தளத்திற்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 66 ஆகும். இவர்கள் போக இடதுசாரிகளுக்கு 19 பேர் உள்ளனர்.
இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18, பிஜூ ஜனதாதளத்திற்கு 6, அதிமுகவுக்கு 5, சமாஜ்வாடிக்கு 5, ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 4, அஸ்ஸாம் கண பரிஷத்திற்கு 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்கள் தவிர தெலுங்குதேசம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட 6 கட்சிகளுக்குத் தலா 1 இடம் உள்லது.
நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை 8 ஆகும். சுயேச்சைகள் மற்றும் பிறரின் எண்ணிக்கை 6 ஆகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications