பைனான்சியர் குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுமி உட்பட 3 பேர் கழுத்து நெரித்து கொலை
கரூர்: கரூரில் பைனான்சியர் குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுமி உட்பட 3 பேரை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (54). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கல்யாணி (47). இவர்களுக்கு உமா (27), கலையரசி(22) என்ற 2 மகள்கள் இருந்தனர்.
இதில் உமாவுக்கும், சிதம்பரத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றி வரும் பூபதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி, தாரணிகா (5) என்ற மகள் உள்ளார். தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் தாரணிகா, தனது பாட்டி கல்யாணியின் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை உமா, தாய் கல்யாணிக்கு போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த உமா, தனது கணவர் பூபதியுடன் வெண்ணெய்மலையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் உள்ளே பார்த்த போது, கல்யாணி, கலையரசி, தாரணிகா ஆகிய 3 பேரும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் கழுத்தில் கிடந்த 25 பவுன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து 1 கி.மீ. தூரம் வரை சென்று அங்கே நின்றுவிட்டது.
போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த வெண்ணெய்மலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications