தானே புயல்- 3 மாவட்டங்கள், புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னைக்கு வெகு அருகே தானே புயல் வந்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தானே புயல் சென்னையை நெருங்கி வருகிறது. நாளை காலையில் இது புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications