விவசாய நிலையத்தில் மகன் தயாநிதி கட்டிய கல்லூரி- அமைச்சர் அழகிரிக்கு கலெக்டர் சகாயம் நோட்டீஸ்

மதுரை திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியில், விவசாய நிலங்களை அழித்து, மு.க. அழகிரிக்குச் சொந்தமான தாயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக ராமலிங்கம் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதனால் கரிசல் குளம் கண்மாய்க்கு வரும் நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது பிரதிநிதிகள் மூலமோ வரும் 4 ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில மோசடி புகார்
இதேபோன்று, விதிமுறைகளை மீறி நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான புகாரில், கிறிஸ்டோபர் ஆசிர், சத்திய மூர்த்தி ஆகிய 2 பேர் நாளை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் வரும் 3ஆம் தேதி ஆஜராகுமாறு, மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நிலமோசடி தொடர்பான புகாரின்பேரில், கார் மேகம் என்பவரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் துணை ஆணையரும் வரும் 3ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, மாவட்ட ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications