ஜன 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1.1.2012 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கடந்த அக் மாதம் 24ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 1.1.2012 அன்று 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர்.
நெல்லையில் 1 லட்சம் மனு
அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் அந்தந்த வாக்கு சவாடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. தாலுகா அலுவலகங்களிலும் பெயர் சேர்க்க மனு அளித்தனர். நவ 8ம் தேதி வரை பெயர் சேர்க்க மனுக்கள் பெறப்பட்டன. வட மாவட்டங்களில் மழை, வெள்ளம் காரணமாக வாக்காளர் பெயர் சேர்க்க நவ 11ம் தேதி வரை கூடுதலாக மூன்று நாட்கள் அவசாகம் கொடுக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்தனர்.
ஜனவரி 5 ல் வெளியீடு
இவ்வாறு பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்கள் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாக சென்று 100 சதவீதம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பது தொடர்பாக இறுதி ஆணை பிறப்பித்தனர். ஜன 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இதை தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications