கிறிஸ்துமஸ் பண்டிகை: டாஸ்மாக் கடைகளில் 2 நாளில் ரூ.120 கோடிக்கு விற்பனை

பண்டிகைகள், விழாக்களின் போது மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழகத்தில் மது விற்பனையில் டாஸ்மாக் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதனால் விசேஷ நாட்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் மொத்தம் 6,696 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
ஆண்டுத்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த அன்று டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் மது வகைகள் அதிக அளவில் விற்பனையானது. சாதாரண நாட்களில் ரூ.45 கோடி முதல் 50 கோடி வரை டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கின்றது.
இந்த நிலையில் கடந்த 24ம் தேதி, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளில் 1,34,000 கேஸ்கள், பீர் வகைகளில் 56,000 கேஸ்கள் உள்பட ரூ.52 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளது.
கிறிஸ்துமஸ் அன்று 1,70,000 வெளிநாட்டு மதுபான வகைகள் அடங்கிய கேஸ்கள், 93,000 பீர் கேஸ்கள் உள்பட ரூ.68 கோடிக்கும் மது வகைககள் விற்பனையானது. இதன்மூலம் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி மொத்தம் ரூ.120 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் தமிழகத்தில் விற்பனையாகி உள்ளது.
வரும் 2012 புத்தாண்டு நாளில் தமிழகத்தில் மதுபான விற்பனையை ரூ.200 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன் ஏற்பாடாக, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுப்பான இருப்புகளை வைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications