தூத்துக்குடிக்கு 194 வெளிநாட்டு பயணிகளுடன் வந்த ஹாலிவுட் கப்பல்
தூத்துக்குடி: உலக புகழ்பெற்ற ஹாலிவுட் கப்பல் 194 வெளிநாட்டு பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்தது.
தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அதிநவீன சுற்றுலா கப்பல்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று தூத்துக்குடி ஜேஎம் பக்சி நிறுவனத்தின் சார்பில் சீ பார்ன் லெஜெண்ட் என்ற அதிநவீன சொகுசு கப்பல் வந்தது. இந்த கப்பல் 1997ல் ஹாலிவுட் இயக்குனர் ஜான் டி போன்ட் இயக்கத்தில் வெளியான ஸ்பீட் 2 க்ரூஸ் கன்ரோல் படத்தில் நடித்து உலக புகழ் பெற்றது.
அதிநவீன சொகுசு கப்பல்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ள இந்த கப்பலில் சுற்றுலா செல்ல உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. இந்த கப்பல் நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தது.
இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம், பிரேசில், ஸ்பெயின், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 194 பயணிகள் இருந்தனர். துறைமுக முதல் கூடுதல் தளத்திற்கு காலை 6.30 மணிக்கு வந்த இந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 4 பேருடன் தலா 97 ஆண்கள் மற்றும் பெண்களும் வந்தனர்.
இந்த சுற்றுலா பயணிகளையும், கப்பல் கேப்டன் ஆண்டூரு பெட்டரையும் தூத்துக்குடி துறைமுக போக்குவரத்து மேலாளர் முத்து, ஜேஎம் பக்சி நிறுவன பொது மேலாளர் டிட்டோ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications