'பெத்த' பேரு -விலை போகாத சிரஞ்சீவி!
ஆந்திராவை தெலுங்கானா சூறாவளி தாக்குவதற்கு முன்பு பெரும் புய��ாக அந்த மாநிலத்தை பயமுறுத்தியவர் சிரஞ்சீவி. பெரும் ஆரவாரத்துடன் அரசியலுக்கு வந்து அதே வேகத்தில் அடிபட்டுப் போனவர் இந்த மெகா ஸ்டார்.
என்.டி.ராமாராவுக்குப் பிறகு பெரும் புயலைக் கிளப்பிய அரசியல்நடிகர் சிரஞ்சீவிதான். இவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. திருப்பதியில் வரலாறு காணாத கூட்டத்தைக் கூட்டி பிரஜா ராஜ்ஜியம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் சிரஞ்சீவி. இதே வேகத்தில் இவர் போனால் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்று அனைவரும் கூறினர்.
ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தல் களத்தில் சிரஞ்சீவி புயல் மண்ணைக் கவ்வியது. கரையைத் தொடாமலேயே கலைந்து போனது. சொற்ப இடங்களிலேயே அவரால் வெல்ல முடிந்தது. தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட அவரால் வெல்ல முடியவில்லை.
இதையடுத்து கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸில் ஐக்கியமாக முடிவெடுத்தார் சிரஞ்சீவி.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி டெல்லி வந்த அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஐக்கியத்தை உறுதி செய்து பகிரங்கமாக அறிவித்தார்.
இப்படி ஆந்திராவை உலுக்கிய அரசியல் -சினிமா புயல் சிரஞ்சீவி சத்தமில்லாமல் ஒடுங்கிப் போன ஆண்டு 2011.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications