ஜனவரி 15ம் தேதி புதிய கட்சி துவக்கம்- முன்னாள் பாமாக எல்எல்ஏ வேல்முருகன் அறிவிப்பு
சிதம்பரம்: ஜனவரி 15ம் தேதி அன்று புதிய கட்சி தொடங்க உள்ளதாக பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் பாமக முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகன் கூறியதாவது,
சென்னையில் முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன். இதற்கு பக்கபலமாக பாமகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். பாமகவைச் சேர்ந்த பலரும் எங்கள் கட்சிக்கு வருவார்கள் என்று நம்புகின்றேன்.
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சாரம் அளிப்பதை நிறுத்தக் கோரி நெய்வேலியில் போராட்டம் நடத்தவுள்ளோம், என்றார்.
இந்த பேட்டியின் போது, வேல்முருகன் உடன் முன்னாள் எம்எல்ஏ-க்கள் சண்முகம், காவேரி, காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ராயநல்லூர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications