புத்தாண்டு: 'சமத்துப் பிள்ளைகள்' ராசா, கல்மாடிக்கு மட்டும் ஸ்பெஷல் உணவு!

திகார் சிறையில் சுமார் 12,000 கைதிகள் உள்ளனர். அதில் 2ஜி வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும், காமென்வெல்த் ஊழல் வழக்கில் கைதான காமென்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியும் அடக்கம். சிறையில் அத்தனை பேர் இருந்தும் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு தங்கள் நண்பர்கள், உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
அந்த 2 பேர் வேறு யாருமில்லை ஆ.ராசவும், கல்மாடியும் தான். இது மட்டுமின்றி அந்த 2 விஐபி கைதிகளுக்கு மட்டும் பரோட்டா, புலாவ், பன்னீர், கீர், அல்வா, பூரி மற்றும் இனிப்பு வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சிறை விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுங்காக நடந்து கொள்பவர்களுக்கு புத்தாண்டில் தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்க அனுமதிப்போம் என்றனர்.
அப்படி என்றால் திகாரில் ஒழுங்காக நடந்து கொள்ளும் கைதிகள் ராசாவும், கல்மாடியும் மட்டும் தான் போல் இருக்கின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications