பக்தர்கள் கூட்டம் அதிகரி்ப்பு: புளியரையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

கடந்த கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் துவங்கியது. இந்நிலையில் மண்டல பூஜைக்கு பின்பு கடந்த மாதம் 27ம் தேதி நடை அடைக்கப்பட்டு பின்பு மகர ஜோதி பூஜைக்காக 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து செங்கோட்டை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சபரிமலை சென்றனர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் புளியரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். கடந்த சில தினங்களாக முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக சபரிமலை செல்லும் கூட்டம் குறைந்திருந்த நிலையில் நேற்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் பன்மடங்காக பெருகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications