பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வுத் திட்டம்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை
சென்னை: 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'தானே' புயலால் புதுச்சேரி மாநிலமும் மற்றும் தமிழகத்தின் கடலூர் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர்ச்சேதமும், கணக்கிலிட முடியாத அளவில் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதமாக முடுக்கிவிட்டுள்ளது. இடைக்கால நிவாரண நிதி குறித்த அறிக்கையை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் தந்தால் உடனடியாக இடைக்கால நிவாரண உதவி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
எனவே இடைக்கால நிவாரணம் மட்டுமின்றி, நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பெருமக்களுக்கு எந்த வகையில் உதவிக்கரம் நீட்டலாம் என்பதை மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயலாற்றி தீர்வு காண வேண்டும்.
புயலில் முந்திரி மட்டும் அழிந்தால் அடுத்த ஆண்டு விளையலாம். ஆனால் முந்திரி செடியே அழிந்துள்ளதால் விவசாயிகள் மிகப் பெரிய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications