பெண் டாக்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவர்- கொன்றது ஏன்?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரவு சிகிச்சை அளித்து கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர் வாளால் வெட்டியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் துப்பு துலங்கியது. கர்ப்பிணி மனைவி இறந்ததால் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் வந்து இந்த வெறியாட்டத்தை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி விட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மகேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா. 6 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 30ம் தேதி மதியம் திடீரென்று கை, கால் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனே அவரை மகேஷ் டாக்டர் சேதுலட்சுமியிடம் அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி நித்யா வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. உடனே ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றார். இதற்கு மகேஷ் சம்மதிக்கவே ஆபரேசன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அதன்பிறகு நித்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது மனைவியை வேறு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்வதாகக் கூறிய அவர் நித்யாவை பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு நித்யா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் ஆத்தரிமடைந்த மகேஷ் தனது மனைவி சாவுக்கு டாக்டர் சேதுலட்சுமி தான் காரணம் என்று கருதினார். கடந்த 31ம் தேதி மனைவி உடலை அடக்கம் செய்த பிறகு தனது நண்பர்களை சந்தித்த மகேஷ் அந்த டாக்டரை சும்மா விடக்கூடாது, எனது மனைவி எப்படி துடிதுடித்து இறந்தாளோ அதே போன்று டாக்டரை சாகடிக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார். அவரது நண்பர்களும் அதற்கு சம்மதித்தனர்.
இதை தொடர்ந்து நேற்றிரவு 10.30 மணி அளவில் மகேஷ் தனது நண்பர்கள் இருவருடன் ஆட்டோவில் டாக்டர் சேதுலட்சுமி மருத்துவமனைக்கு சென்றார். நண்பர்கள் இருவர் வெளியில் நின்று கொள்ள மகேஷ் மட்டும் மருத்துவமனைக்குள் சென்று வாளால் டாக்டரை சரமாரியாக வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
கொலையாளிகளை பிடிக்க தென்பாகம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், ஏஎஸ்பி சோனல்சந்திரா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications