பெண் டாக்டர் படுகொலை: கோவில்பட்டியில் அரசு டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்
கோவில்பட்டி: தூத்துக்குடியில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கைக்குழந்தைகளுடன் சிகிச்சை பெற வந்த பெண்கள் ஆவேசமடைந்து வளாகத்திலுள்ள அரசு தலைமை டாக்டர் வீட்டை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர் சேதுலட்சுமி நேற்றிரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக் கோரியும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் கைக் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி ஆகிய நோய்களுக்கு சிகி்ச்சை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். அவர்கள் டாக்டர் சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஆவேசமடைந்தனர்.
அரசு மருத்துவமனை உள்ளேயே டாக்டர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தலைமை டாக்டர் ருக்மணி வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுபோல் கோவில்பட்டி இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு டாக்டர் சாந்தகுமார் தலைமையில் 13 டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications