காலனா பெறாத அன்னா சோனியாவைப் பற்றி பேசுகிறார்: காங். சாடல்
லக்னோ: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை காலனா பெறாதவர் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ பொதுச் செயலாளர் பி.கே.ஹரிப்பிரசாத் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எதற்கும் உதவாத அன்னா நாட்டின் பழமை வாய்ந்த கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். நான் மட்டும் இளைஞனாக இருந்தால் இந்நேரம் அன்னாவின் சொந்த ஊரான ராலேகான் சித்திக்கே சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதை அவருக்கு புரிய வைத்திருந்திருப்பேன்.
காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச மாநிலத்திற்கு எவ்வளவோ நன்மைகள் செய்துள்ளது என்றார்.
இதற்கிடையே அன்னாவின் முன்னாள் உதவியாளர் கூறுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அன்னா ஹசாரே மத்திய அரசை ஓவராகத் தான் வலியுறுத்தி வருகிறார். அம்ரித்சர் வந்த பிரதமருக்கு அவரது ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டியது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications