தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள்: பயத்தால் தூங்காத உ.பி. மக்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த 2ம் தேதி இரவு தூங்கவே இல்லை. தூங்கினால் கல்லாக மாறிவிடுவார்கள் என்ற வதந்தி பரவியதே அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்க காரணம்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2ம் தேதி இரவு அன்று தூங்குபவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என்று பலருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அது மட்டுமின்றி அன்றிரவு நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வதந்தி லக்னோ, கான்பூர், அலகாபாத், பரேலி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் காட்டுத் தீ போன்று பரவியது. கல்லாக மாறுவதைத் தவிர்க்க மக்கள் தெருவில் நிற்க வேண்டும் என்றும் அந்த குசும்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயந்து போன ஆயிரக் கணக்கான மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தெருக்களில் நின்று கொண்டிருந்தனர். மேலும் சிலர் தீய சக்தியை விரட்ட விளக்கு ஏற்றி பூஜை செய்துள்ளனர். பலர் எப்பொழுது நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பீதியில் இருந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மக்களை சமாதனம் செய்தும் அவர்கள் கேட்கவில்லை.

இரவில் யாரும் தூங்காதீர்கள், தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள் என்று சிலர் சமூக வளைதளங்களிலும் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த சிலர் அதை நம்பவில்லை. ஆனால் பலர் அது உண்மையாக இருக்கலாம் என்று நினைத்து இரவில் தூங்கவே இல்லை. ஏற்கனவே பீதியில் இருந்த மக்களுக்கு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர்கள் ஒரு சில கிராமங்களி்ல் தூங்கியவர்கள் கல்லாக மாறிவிட்டதாகத் தெரிவித்து மேலும் பீதியைக் கிளப்பியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வதந்தி பரவியதால் அதை பரப்பிவிட்ட நபரை போலீசாரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+