நிவாரணப் பணிகளுக்கு ரூ. 98 லட்சம் நிதி: நித்தியானந்தா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

புயலால் பாதிக்கப்பட்ட புதுவைக்கு நித்தியானந்தா இன்று காலை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள எனது ஆசிரமம் சார்பில் ரூ.98 லட்சம் வழங்கப்படும். முதல் கட்டமாக ரூ.25 லட்சம் செலவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, ஆடை, போர்வை ஆகியவற்றை எனது ஆசிரமத் தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர தொண்டர்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புயலால் சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றி வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications