இடம்பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு 8ம் தேதி போலியோ சொட்டு மருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடம்பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு 2ம் தவணை போலியோ சொட்டு மருந்து ஜனவரி 8ம் தேதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்ஸ் போலியோ முகாம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் போலியோ நோய் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இருந்த போதிலும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோர் குழந்தைகள் மூலம் போலியோ வைரஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அடிக்கடி இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு சரியான தவணைகளில் தடுப்பு மருந்து கிடைப்பதில்லை.

சென்ற மாதம் 11-12-2011 அன்று இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கு போலியோ நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை உருவாக்குவதற்காக சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.

இந்த போலியோ சிறப்பு முகாமில் அரசுத் துறையை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனலை சார்ந்தவர்களும் சேர்ந்து பணியாற்றினார்கள். இந்த முகாம் வாயிலாக 31,000 குழந்தைகள் பயனடைந்தனர்.

8-1-2012 அன்று இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்காக 2ம் தவணை போலியோ சொட்டு மருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கான பட்டியலில் புதிதாக வந்தவர்களும் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

8-1-2012 (ஞாயிறு) அன்று நடைபெறும் முகாம் வாயிலாக ஏறக்குறைய 32,000 இடம் பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+