90 பேர் உயிரைக் குடித்த வழக்கில் இமாமி நிறுவன இயக்குநருக்கு ஜாமீன் மறுப்பு
கொல்கத்தா: 90 பேர் உயிரைக் குடித்த ஆம்ரி மருத்துவமனை தீ விபத்து வழக்கில் இமாமி நிறுவன இயக்குநர் ஆர் எஸ் கோயங்கா, ஷ்ராச்சி நிறுவன தலைவர் டோடி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 9-ம் தேதி அதிகாலை கொல்கத்தாவின் ஆம்ரி மருத்துவமனைல் ஏற்பட்ட தீ விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஆம்ரி நிறுவனத்தின் இயக்குநர்களான எஸ்கே டோடி, ரபி டோடி, ஆர் எஸ் கோயங்கா, பிரஷாந்த் கோயங்கா, மணீஷ் கோயங்கா, தயானந்த் அகர்வால் ஆகிய 6 பேர், மற்றும் மருத்துவமனையின் இரு அலுவலர்களை மேற்கு வங்க போலீஸ் கைது செய்தது.
இவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அலிப்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஆர் எஸ் கோயங்கா இமாமி நிறுவன இணைத் தலைவர். எஸ்கே டோடி ஷ்ராச்சி நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்துதான் ஆம்ரி மருத்துவமனையை நிறுவின.
இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று அலிப்பூர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் விசாரணைக்கு வந்தனர்.
ஆம்ரி மருத்துவமனை இயக்குநர்கள் 6 பேரும் பல்வேறு நோய்களால் வாடுவதாகவும், எனவே அவர்களுக்கு ஜாமீன் தர வேண்டும் என்றும் அவர்களின் வக்கீல்கள் வாதிட்டனர். யாரையும் ஜாமீனில் விட முடியாது என்றும், நீதிமன்றக் காவலை வரும் ஜனவரி 19-ம் தேதி வரை நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications