எப்ஐஆரில் பெயர் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து எட்டு வாரத்திற்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தேர்தல் நடைமுறை விதிகளின்படி, தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், மிகக் கடுமையான குற்றவியல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பெயர் இருந்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்சு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மோகன், நாடாளுமன்றத்தில் உள்ள 76 எம்.பி.க்களுக்கு எதிராக 275 மிகக் கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு தகுந்த சட்டத்தை இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.
8 வாரத்திற்குள் பதில்
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் தலைமை தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications