குண்டாக இருந்ததனால் மனம் உடைந்து தீக்குளித்து என்ஜினியர் தற்கொலை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் குண்டாக இருப்பதனால் மனமுடைந்த என்ஜினியர் ஒருவர் தீக்குளி்தது பரிதாபமாக இறந்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் கே. சந்திரசேகர்(35). தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கும், பிரபாவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் மியாபூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு பிரபாவதி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதனால் சந்திரசேகர் வீட்டில் தனியாக இருந்தார். அவருக்கு தான் குண்டாக இருப்பது வருத்தத்தை தந்துள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க அவர் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் எடை குறைந்தபாடில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
அவரது வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது சந்திரசேகரின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அவர் சுயநினைவின்றிக் கிடந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவி்ததனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மியாபூர் எஸ்ஐ கூறியதாவது,
வீட்டில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவரது படுக்கையறையில் மதம் மற்றும் பெண்கள் குறித்த சில குறிப்புகள் கிடைத்தன. ஆயுர்வேத மருத்துவத்தாலும் எடை குறையாததால் சந்திரசேகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications