பொங்கல்: ரூ.350 கோடி செலவில் 3.5 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 350 கோடி செலவில் 3.5 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில் தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம் குறித்து முதல்வர் ஜெயலலிதா 5.1.2012 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது புத்தாடைகளை இலவசமாக வழங்கும் நோக்கத்துடனும், அகில இந்தியாவிற்கும் முன்னோடி சமூக நல திட்டமான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டம் தமிழக அரசினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003ம் ஆண்டு ஆணையிட்டார்.
அதன்படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தேவைப்படும் 170.84 லட்சம் சேலைகள் மற்றும் 169.75 லட்சம் வேட்டிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அதன்படி தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணை வழங்கியுள்ளார்.
இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் 94 கோடி ரூபாயை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார். ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவு கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா 15.9.2011 அன்று ஆணையிட்டிருந்தார்.
மேலும் இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூலி உயர்வினை கனிவுடன் பரிசீலனை செய்து வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நெசவு கூலியினை வேட்டி ஒன்றுக்கு ரூ. 16-லிருந்து ரூ. 18.40 ஆகவும், சேலை ஒன்றுக்கு ரூ. 28.16-லிருந்து ரூ. 31.68 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் 15.05.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு 22.09.2011 முதல் 21.10.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்த படியாலும், நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுவதிலும், இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் தேவையான அளவு வேட்டி, சேலைகள் நெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். வேட்டி மற்றும் சேலை உற்பத்தி தொடர்ந்து முனைப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விநியோகம் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கப்பட்டு, வரும் தமிழ் புத்தாண்டுக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications