கடலூரில் நிவாரணத்தில் ஊழல்- பண்ருட்டி தேமுதிக எம்எல்ஏ உண்ணாவிரதம்
பண்ருட்டி: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத்தில் அதிகாரிகள் ஊழல் செய்து வருவதை கண்டித்து தேமுதிக எம்.எல்.ஏ. சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து உள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கியதில் பலத்த சேதமடைந்தது. இதனால் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் புயல் சேத மதிப்பீட்டில் ஆளுங்கட்சியின் தலையீடு, பணம் வழங்குவதில் அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை.
போனில் தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பதில்லை. புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ரூ.5000 அறிவித்தார். ஆனால் பொது மக்களுக்கு வெறும் ரூ.2500 மட்டுமே வழங்கப்படுகிறது என்று பண்ருட்டி தேமுதிக எம்.எல்.ஏ.சிவக்கொழுந்து குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே அதிகாரிகளின் இந்த போக்கை கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலையம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சேகர் உள்ளிட்ட பலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் கூட அதிகாரிகள் கையால் செய்துள்ள சம்பவம் தமிழகத்தை தலைக்குனிய வைத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications