கிங்ஃபிஷர் விமானங்கள் 1,000 சதவீதம் பாதுகாப்பானவை: விஜய் மல்லையா உறுதி

கடும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து வரும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானங்களை போதிய அளவு பராமரிக்காமல் உள்ளதாகவும், இதனால் அந்த விமானங்கள் பாதுகாப்பு இல்லாதவை என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் எச்சரித்தது. இதையடுத்து தான் தனது நிறுவன விமானங்கள் பாதுகாப்பானவை என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,
கிங்ஃபிஷர் விமானத்தில் பயணிப்பது 1000 சதவீதம் பாதுகாப்பானது. பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பற்றி தினமும் ஏதாவது செய்தி வராவிட்டால் விமான போக்குவரத்து செய்தியாளர்களின் சம்பளம் குறைக்கப்படும் போலும். சரியா, இல்லையா?
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன சிஇஓ சஞ்சய் அகர்வலா கூறுகையில், விமானப் போக்குவரத்துத் துறைக்கு பாதுகாப்பு பற்றியெல்லாம் அக்கறையில்லை. குறித்த நேரத்தில் விமானங்களை இயக்க எங்கள் நிறுவனத்தில் போதுமான பைலட்டுகளும், என்ஜினியர்களும் உள்ளனர். எங்கள் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படும் என்றும், பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications