கடலூர் மாவட்டத்தில் புயலால் ரூ. 1500 கோடி மதிப்பிலான சேதம்-கலெக்டர் அமுதவல்லி தகவல்

Subscribe to Oneindia Tamil

Amuthavalli
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கிய பகுதிகளில் ரூ. 1500 கோடி அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தானே புயலால் மின் வாரியத்துக்கு ஏற்பட்ட சேதம் இன்னமும் கணக்கிடப்படவில்லை. சுமார் 40 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அவற்றைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

80,000 ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தென்னை, முந்திரி, கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் 80 ஆயிரம் ஹெக்டேரில் சேதம் அடைந்துள்ளன. 28 ஆயிரம் ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களும், 3.5 லட்சம் வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

புயல் பாதிப்புகள் குறித்த விவரங்களை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

முதல் கட்ட மதிப்பீட்டின்படி ரூ. 1500 கோடி அளவுக்கு ஒட்டுமொத்த சேதம் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்றார் கலெக்டர் அமுதவல்லி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+