கருணாநிதி, ஸ்டாலின் மீது பொய் புகார்: என்.எஸ்.ஏ. குரூப் எம்.டி மீது நடவடிக்கை கோரி மனு

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் 79 பேர் மீது என்.எஸ்.ஏ. குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.ஆறுமுகம் கொடுத்த புகார் பொய்யானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று டிஜிபியை சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர 79 பேருக்கு எதிராக என்.எஸ்.ஏ. குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.ஆறுமுகம் 1.1.2012 அன்று பொய் புகார் ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளார்.
பொய்யான, பொருளற்ற, எரிச்சலூட்டும் புகார்களின் அடிப்படையில் ஏராளமான திமுகவினர் சிறைகளில் அடைக்கப்படுவதைக் கட்சி கண்டுள்ளது. பொய்யான புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்வதால் தற்போது பல நில அபகரிப்பு பிரிவுகள் சிவில் புகார்களைத் தீர்க்க தவறாகவும், துஷ்பிரயோகமாகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களால் தங்களது சட்டபூர்வமான சொத்துகளை இழந்து வருகின்றனர்.
தோற்றத்திலேயே அந்தப் புகார் அதுவும் 81 பேருக்கு எதிரானது பொருளற்றது என்று தெரிகிறது. மாநில அரசின் மிகவும் வருத்தத்திற்குரிய செயல் என்னவென்றால், மேற்கூறிய புகாரைக் காவல் துறை பெற்றது மட்டுமின்றி அதை பத்திரிகைகளுக்கும் கொடுத்து அந்த 2 நாட்களாக அந்தப் பொய்யான புகாரைப் பற்றிய செய்திகளை வெளியிட வைத்து அதன் மூலம் எங்களது திமுக தலைவர் மற்றும் பொருளாளரின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாகும்.
மேற்கூறிய புகாரில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட பலரின் பெயர்கள் உள்ளன. புகார் மீது கருத்து சொல்வது எங்கள் வேலை அல்ல; உடனடியாக நிராகரிக்கப்பட்ட இத்தகைய பொருளற்ற புகார்களை பெறுதல், புகார்கள் மற்றும் எரிச்சலூட்டும் புகார் பற்றி காவல் நிலையங்களில் மலிவான விளம்பரம் செய்வது எங்களது திமுக தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயருக்கு ஊறு விளைப்பது ஆகியவை பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.
பார்த்த மாத்தத்திலேயே இந்தப் புகார் பொய்யானது, ஆதாரமற்றது என்று தெரிந்திருந்தும், காவல் துறை அதிகாரிகள் மேற்கூறிய புகாரைப் பெற்றிருக்கக் கூடாது. இருப்பினும் அவ்வப்போது உச்ச நீதிமன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் வழங்கியுள்ள வழிகாட்டுத் நெறிமுறைகளை மீறி என்.எஸ். ஆறுமுகம் என்பவர் 4.1.2012 அன்று அளித்த புகாரைப் பெற்றதுடன் எங்களது திமுக தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயரைக் கெடுப்பதற்காக பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற புகார்களை எதிர் காலத்தில் கொடுக்காமல் இருக்க, இத்தகைய புகார்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து தண்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications