இலங்கை அகதிகள் குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் இடம்: தமிழக அரசு உத்தரவு
நெல்லை: தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் ஆதி திராவிடர், பிற்படுத்தபட்டோர், பழங்குடியினர் நலததுறைகளால் நிர்வகிககப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும நீட்டிக்கப்படும். இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி பயில தேவையான உதவிகள் வழங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கிணங்க தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் நலன் கருதி அவர்கள் ஆதி திராவிடர், பிற்படுத்தபட்டோர், பழங்குடியினர் நலததுறைகளால் நிர்வகிககப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நெல்லை கலெக்டர் செல்வராஜ் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டத்தில் உள்ள முகாம் வாழ் தமிழர்களின் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் குழந்தைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் விடுதி விதிகளுக்கு உட்பட்டு தங்கி பயில அனுமதிக்கப்படுவர். எனவே, முகாம் வாழ் தமிழர்களின் குழந்தைகள் இதற்காக விண்ணப்பித்து விடுதிகளில் தங்கி கல்வி பயிலாம் என்றார்.












Click it and Unblock the Notifications