கொசுத் தொல்லை தாங்க முடியலையே ... சிறையில் தவித்த மன்சூர் அலிகான்

Subscribe to Oneindia Tamil

Mansoor Alikan
நில அபகரிப்பு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் புழல் சிறையில் கொசுக்களிடம் சிக்கி படாதபட்டு வருகிறாராம்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைவேலு என்பவர் போலீஸில் கொடுத்த ஒரு புகாரில், 1994-ம் ஆண்டு ரூ.2.60 லட்சத்திற்கு வாங்கிய தனது இடத்தை நடிகர் மன்சூர் அலிகான் செல்வாக்கை பயன்படுத்தி நில அபகரிப்பு செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து போலீஸார் மன்சூர் அலிகானை விசாரித்து பின்னர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மன்சூர் அலிகான்.

முன்னதாக மன்சூரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டுக்குப் போலீஸார் போனபோது உடல் முழுக்க நல்லெண்ணெய் வழிய வழிய நின்று கொண்டிருந்தார் மன்சூர். என்னங்க இது என்று போலீஸார் கேட்டபோது, குளிக்கப் போறேங்க என்று கூறியுள்ளார் மன்சூர். பரவாயில்லை அப்புறம் குளிக்கலாம், முதலில் எங்களுடன் வாருங்கள் என்று போலீஸார் கூறவே, உடலில் எண்ணெயுடன் காவல் நிலையத்திற்கு வந்தார் மன்சூர். இதையடுத்து அங்கு வைத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது புழல் சிறையில் புலம்பியபடி இருக்கிறாராம் மன்சூர். எண்ணெய் தேய்த்துக் குளிக்க விடாமல் செய்து விட்டார்களே என்பதற்காக அல்லவாம், இப்படி கொசுக்கடியில் சிக்க வைத்து விட்டார்களே என்றுதானாம். அந்த அளவுக்கு புழல் சிறையில் கொசுத் தொல்லையாம்.

டார்டாய்ஸ் கொடுத்து கொசுத் தொல்லையைக் குறைக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாமே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+