உத்தர பிரதேசத்தில் ரூ.14 கோடி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது 3 இடங்களில் கணக்கில் வராத ரூ. 13.66 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி காசியாபாத்தில் நேற்று போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தினர். அப்போது லிங்க் ரோடு, இந்திராபுரம் மற்றும் மசூரி பகுதிகள் வழியாக வந்த வாகனங்களில் இருந்து ரூ.13.66 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்எஸ்பி ரகுபிர் லால் கூறியதாவது,
நேற்று பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.12.30 கோடி கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வங்கிக்கு சொந்தமானது. அந்த பணத்தை ஏடிஎம் மெஷினில் போடுவதற்காக ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
உடனே வருமானவரிததுறை மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு தகவல் தெரிவித்து இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறியுமாறு தெரிவித்தோம். விசாரணையில் ரூ. 8 கோடி பல்வேறு தனி நபர்களுடையது என்பது தெரிய வந்தது என்றார்.
மசூரி பகுதியில் ரூ.58 லட்சமும், இந்திராபுரத்தில் ரூ.20 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications