திருச்சிக்கு புது போலீஸ் கமிஷனர்-5 ஐஜிக்கள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநாகரின் புதிய போலீஸ் கமிஷனராக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமையன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

திருச்சி மத்திய மண்டலம் ஐ.ஜி. கே.சொக்கலிங்கம் சென்னை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஏ.அலெக்சாண்டர் மோகன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

திருச்சிக்கு புதிய கமிஷனர்

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த மாசானமுத்து மாற்றப்பட்டார். அவர் சென்னை பயிற்சி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நவீன மயமாக்கல் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், திருச்சி போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சுனில்குமார் சென்னை நவீன மயமாக்கல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+