சசிகலா சொத்து குவிப்பு வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு ஆவணங்களை தமிழில் தருமாறு கோரி சசிகலா நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதை எதிர்த்து சசிகலா பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று சசிகலாவின் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை நீதிபதி வரும் 20ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications