முல்லைப் பெரியாறு : அணையை உடைக்க உரிமை உண்டு- கேரளா புதிய மனு
டெல்லி: கேரள பகுதிக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும், புதிய அணை கட்டவும் கேரளாவுக்கு உரிமை உண்டு என்று ஐவர் கமிட்டியிடம் கேரள அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. புதிய அணை கட்டிய பின், அதை பாதுகாக்கும் உரிமை கேரளாவுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் தேவையை நிறைவேற்றுவது முல்லைப் பெரியாறு அணைதான். இந்த அணை கட்டி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற காரணத்தை காட்டி, அதனை இடிக்க கேரளா முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவிடம் கேரளா வற்புறுத்தி வருகிறது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ’’தற்போது இருக்கும் அணை மிகவும் பலமாக இருக்கிறது. இதனால் அணை உடைய வாய்ப்பு இல்லை. எனவே புதிய அணை தேவை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அணையை இடிக்க உரிமை உண்டு
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று டெல்லியில் ஐவர் குழுவின் கூட்டம் நீதிபதி ஆனந்த் தலைமையில் நடந்தது. அப்போது கேரளா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கேரள பகுதிக்குள்தான் முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. எனவே அதை உடைத்து விட்டு புதிய அணை கட்ட கேரளாவுக்கு உரிமை உண்டு.
புதிய அணை கட்டிய பின், அதை பாதுகாக்கும் உரிமை கேரளாவுக்கு அளிக்க வேண்டும். அதன் நீர்பங்கீடு பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்க, உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமிக்கலாம். இந்த குழு இதற்கான விதிமுறைகளை வகுக்கலாம்.
புதிய அணையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு பங்கீடு செய்யவும் கேரளா தயாராக இருக்கிறது’’ என்று புதிய மனுவில் கேரளா கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications