உள்ளாடைக்குள் வைத்து புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற வார்டன் கைது
சென்னை: புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சிறை வார்டன் ஜோதிமணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புழல் சிறையில் வார்டனாக இருப்பவர் ஜோதிமணி(23). மதுரையைச் சேர்ந்த அவர், சிறை குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் பணிக்கு சென்றார். அப்போது சிறை நுழைவாயிலில் நின்ற காவலர்களுக்கு அவரது நடையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கவர் சிக்கியது. இது குறித்து சிறை சூப்பிரண்டு கருப்பண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் புழல் போலீசாரிடம், ஜெயிலர் செந்தில்குமார் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வார்டன் ஜோதிமணியை இன்ஸ்பெக்டர் ஹரி கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
விசாரணையில், சிறையில் உள்ள குறிப்பிட்ட செடியின் கீழ் கஞ்சா கவரை வைக்குமாறு காவாங்கரையைச் சேர்ந்த நபர் கொடுத்தாகவும், அதற்காக ரூ.2,000 அளிப்பதாகக்கூறியதாகவும் ஜோதிமணி தெரிவித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த புழல் போலீசார் சிறையில் உள்ள எந்த கைதிக்காக கஞ்சா கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications