பாபா ராம்தேவ் முகத்தில் கறுப்பு மை வீச்சு!

யோகா குரு பாபா ராம்தேவ் ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷனல் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஊழலுக்கு எதிராக வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக அவர் தன் திட்டங்களை விளக்கியபோது, அவர் மீது கறுப்பு மை வீசப்பட்டது. உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் ராம்தேவின் முகத்தில் கருப்பு மையை தெளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ராம்தேவின் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து பலமாக அடித்தனர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் சொட்டியது. அந்த நபர் பெயர் சித்திக் என்பது பின்னர் தெரியவந்தது.
ஒரு பாதுகாப்பு அலுவலர் போல் வாக்கி டாக்கி வைத்துக் கொண்டு அந்த கருத்தரங்க அறைக்குள் சித்திக் நுழைந்துள்ளார். அவரிடம் இருந்து திராவக புட்டி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்து ராம்தேவ் கூறுகையில், "நான் என்ன செய்தேன்? எதற்காக இப்படி செய்கிறார்கள்? எப்பொழுதுமே உண்மைக்காக போராடுபவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத் தான் தீர வேண்டும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரச் சொல்லி போராடினால் முகத்தில் கருப்பு மை பூசுகிறார்கல். இதனால் எல்லாம் நான் அசரமாட்டேன். என்ன நடந்தாலும் சரி தொடர்ந்து போராடுவேன்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications