நீ இறந்துட்டம்மா, அதான் பென்ஷன் தரல: மூதாட்டியை அதிரவைத்த அரசு அதிகாரிகள்
பெங்களூர்: 4 மாதமாக முதியோர் பென்ஷன் வராத காரணத்தை அறிந்துகொள்ள தாலுகா அலுவலகம் சென்ற மூதாட்டியிடம் அவர் இறந்துவிட்டதால் பென்ஷன் நிறுத்தப்பட்டது என்று கூறி அரசு அதிகாரிகள் அவரை அதிர வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பேலூர் தாலுகா, தாலகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமம்மா(70). அவரது கணவர் ருத்ரைய்யா. தற்போது அவர் உயிருடன் இல்லை. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து சோமம்மாவுக்கு முதியோர் பென்ஷனாக ரூ.400 கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக அவருக்கு பென்ஷன் பணம் வரவில்லை. இதயைடுத்து அவர் பேலூர் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு கடந்த 4 மாதங்களாக பென்ஷனே வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் அவர்களது ஆவணங்களின்படி சோமம்மா 27-9-2011 அன்று இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்த அந்த மூதாட்டி 'நான் தான் உயிரோடு இருக்கிறேனே. அதனால் மீண்டும் பென்ஷன் கொடுங்கள். அத்துடன் கடந்த 4 மாதத்திற்குரிய பணத்தையும் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்' என்றார்.
இதற்கிடையே இந்த விவகாரம் பத்திரிக்கைக்காரர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து அதிகாரி ஷிவாய்யாவிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் கூறியதாவது, முதியோர் பென்ஷன் வாங்குபவர்களின் பெயர்களை அங்கன்வாடி ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது தான் தவறு நடந்திருக்க வேண்டும். இந்த தவறை திருத்தி பாக்கியுள்ள பணமும் சோமம்மாவுக்கு வழங்கப்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications