நிலமோசடி வழக்கை சட்டப்படி எதிர் கொள்வேன், தற்போது ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை- அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: உறவினருக்கு விதிமுறைகளுக்கு மீறிய வகையில் நிலம் பதிவு செய்து கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போது, ராஜினாமா செய்வது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் அச்சுதானந்தன்(87). இவர் கேரள முதல்வராக இருந்த போது, அவரது உறவினர் டி.கே.சோமன் என்பவரின் பேரில் நிலம் ஒன்றை பதிவு செய்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
இந்த நிலையில் தற்போது சோமனுக்கு வாங்கி கொடுத்த நிலத்தை பதிவு செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புலனாய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு துறையினர், அச்சுதானந்தன் மீது கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியில் மூத்த தலைவரான அச்சுதானந்தன், தனது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட இதர கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களிடம் தனது எதிர்கட்சி தலைவர் பதிவியை ராஜினாமா செய்வதாக தகவல் தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை, அவரை ராஜினாமா செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் அச்சுதானந்தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலமோசடி வழக்கு, காங்கிரஸ் கட்சியினரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தான் காட்டுகின்றது. ஊழலுக்கு எதிரான நிற்கும் அச்சுதானந்தனின் செயல்பாடுகள் கடந்த சட்டசபை தேர்தலின் போது தெளிவாக தெரிந்தது, என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அச்சுதானந்தன் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியினர் என் மீது தொடுத்துள்ள நிலமோசடி வழக்கை சட்டப்படியும், அரசியல் முறையிலும் எதிர்கொள்வேன். கட்சியின் தலைமையின் அறிவுறுத்தலின்படி, தற்போது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நிலமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு ராஜினாமா செய்வதை குறித்து ஆலோசிக்கப்படும், என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications